Sunday, September 23, 2012

கொலுவமரெகதா கோதண்டபாணி-Koluvamaregath kothandapani



பல்லவி 
கொலுவமரெகதா கோதண்டபாணி (கொ) 
அனுபல்லவி 
நலுவகு பலுகுலசெலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுநி  கருதைந (கொ )
சரணம் 
1.வேகுவஜாமுந வெலயுசு தம்புர 
ஜேகொநி  குணமுல ஜெலு வொந்த பாடுசு 
ஸ்ரீகருநிக சரித  சிந்தமணிகிநி 
ஆகலி தீர பாலாரகிம்பநு ஜேசே (கொ )
3.பாகவதுலு கூடி பாகுக க நநய
ராகமுலசே தீபாரத ந மொநரிஞ்சி 
வேகமே ஸ்ரீஹரி விருலபை பவளிஞ்சி
ஜோகொடடி  த்யாகராஜூ ஸுமூகு நி லேபே (கொ )
Meaning
பிரமனுக்கும், சரஸ்வதிக்கும், ருக்மிணிக்கும், சீதைக்கும்,லக்ஷ்மண னுக்கும் கிடைத்தற்கரிய கொலுவிருக்கை  கோதண்டபாணிக்கு எனது இல்லத்தில் அமைந்ததல்லவா?அதிகாலையில் தம்புராவை கையில் ஏந்தி அவனுடைய திவய குணங்களை அழகாக சங்கீர்த்தனம் செய்து,லக்ஷ்மிகரனும் சரணடைந்தவர்களுக்கு சிந்தாமணியுமாகிய 
அவனுக்கு பசி தீரபால் அமுது செய்விக்கும் (கொலு அமைந்ததல்லவா?)பொழுது விடிந்ததும் பெருமானுக்குப் பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து , வாசனை மிகுந்த தாம்பூலம் அளித்து மறவாமல் செவிக்கு (கொலு அமைந்ததல்லவா?) ஒன்று கூடி கன, நய ராகங்களில் இசைபாடி தீபாராதனம் செய்த பின்னர் ஸ்ரீ ஹரியை மலர்ப் படுக்கையின் மீது பள் ளிகொள்ள செய்து தியாகராஜன் அந்த ஸு முகனை த் திருப்பள்ளியெழுச்சி பாடிஎழுப்பும் (கொலு இங்கு அமைந்ததல்லவா?)   

Sunday, August 19, 2012

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapati koliche muchuda




பல்லவி
பக்கல நிலப டி கொலிசே முச்சுட
பா க தெ ல் ப ராதா                            (ப)
அனுபல்லவி

சுக்கலராயநி கே ரு மோமு க ல
ஸுத தி ஸீதம்ம  சௌமித்ரி ராமுநி கிரு (ப)
சரணம்
தநுவுசே வந்த ந மொநரிஞ்சு சுந்நாரா
சநுவுந நாமகீர்த்தந ஸேயு சுந்நாரா
மநஸுந த லசி மைமறசி யு ந்நாரா
நெநருஞ்சி த்யாக ராஜுநிதோ ஹரிஹரி மீரிரு (ப)
The lyrics is in telugu.The meaning in tamil.
  சந்திரனைப் பழிக்கும் முகத்தையும் அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!
இலக்ஷ்மணனே! இராம பிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை செய்யும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?  மனத்தில் த்யானித்து மெய்மறந்து போகிறீர்களா?இத்யகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா? )

ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம-Pandureethi kolu viyyyavaayya rama




பல்லவி
ப ண்டுரீதி  கொ லுவிய்யவய்ய ராம   (ப)
அனுபல்லவி
துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)
சரணம்
ரோமாஞ்சநே க நகஞ்சுகமு
ராமப  கத்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வாக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாகராஜுநிகே
The lyrics is in telugu. The meaning in tamil.

இராம உமது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக. (கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட  உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).(உனது பக்தியின் மூலம் ஏற்படும் ) உடல் சிலிர்ப்பு  என்ற கவசமும்,இராம  பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராமநாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! ஆகவே என்னை சேவகனாக ஏற்றுக்கொள்!